வைத்தியநாத சுவாமி கோவிலில் இரவு பெய்த கனமழையால் சூழ்ந்த மழை நீர் பக்தர்கள் அவதி…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் இரவு பெய்த கனமழையால் சூழ்ந்த மழை நீர் பக்தர்கள் அவதி…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு வேலையில் பெய்த கனமழை காரணமாக உட்பகுதியில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் கோவில் உட்பகுதியான வைத்தியநாத சுவாமி சன்னதி மற்றும் சிவகாமியம்மாள் சன்னதிகள் இக்கோவில் செல்லும் உட்பகுதியில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அவதிக்குள்ளாகினர்.
மழை நீரில் சென்று சாமி தரிசனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இதே நிலை நீடித்து வருவதாகவும் இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக மழை நீரை அகற்றி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.