மக்கள் நீரோடையை கடப்பதற்கு புதிய பாலம் அமைத்து தர கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கனமழையின் காரணமாக அருந்ததியர் காலணியில் நீரோடையை கடக்க முடியாத பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை எனவும் ஆபத்தான முறையில் கரையை கடப்பதாக குற்றச்சாட்டு.,பாலம் அமைத்து தர கோரிக்கை..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் பகுதியில் கோவிந்தன் நகர் அருந்ததியர் காலனி உள்ளது இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையின் காரணமாக அத்திகுளம் தெய்வேந்திரி சோழங்குளம் கண்ம்மாய் பெருகி நீர் வெளியேறி அருந்ததியர் காலனியை ஒட்டியுள்ள நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க அருந்ததியர் காலனி மக்கள் நகர் பகுதிக்கு செல்ல முடியவில்லை எனவும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டு ஆபத்தான முறையில் கரையை கடந்து செல்வதாகவும், சாக்கடை நீருடன் கண்மாய் நீரும் கலந்து சாலைகளில் செல்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து பலமுறை முதலமைச்சர் தனி பிரிவிற்கு மனு அளித்தும், அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக அரசு அப்பகுதி மக்கள் நீரோடையை கடப்பதற்கு புதிய பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் நீரோடைகளில் உள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.