புதுச்சேரி முதலமைச்சரை லடாக், நியோமா கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திப்பு..
புதுச்சேரி முதலமைச்சரை லடாக், நியோமா கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திப்பு.. இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து.
மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்தின் குடிமை நடவடிக்கை திட்டத்தின்கீழ், (Civic Action Programme) இந்தோ திபெத்தியன் எல்லைக் காவல் படை (Indo Tibetan Border Police) ஏற்பாட்டில், லடாக் யூனியன் பிரதேசம், லே மாவட்டம், நியோமா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 2 ஆசிரியர்கள், 26 மாணவர்கள் மற்றும் 2 இந்தோ திபெத் எல்லைக் காவல் படை பிரதிநிதிகள், “பாரத் தர்ஷன்” சுற்றுலாப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்தோ திபெத் எல்லைக் காவல் படையின் Second In Chief சரவணன் தலைமையில் புதுச்சேரிக்கு வந்துள்ள இக்குழுவினர், முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலமைச்சர், இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
புதுச்சேரியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இக்குழுவினர், புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிட உள்ளனர்.