கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் குடியிருப்பு பகுதியில் மரத்தில் கூடு கட்டி உள்ள விஷக் கதண்டுகள்..விபத்து ஏற்படும் முன்பு ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் விஷ கதண்டுகள் கூடு கட்டி உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் அங்கன்வாடிக்கு குழந்தைகள் செல்லும் வழியாகவும் , குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வந்து செல்லும் வழியாகவும் உள்ளதால் கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே விஷக்கதண்டுகளால் விபத்து ஏற்படும் முன்பு ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்