தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சொந்த நிதியில் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சரும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் கோவி செழியன் சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 200 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள உயர்க்கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம், திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெருந்தலைவர் சுந்தர ஜெயபால், திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் கோ.க.அண்ணாதுரை, உதயா ரவிச்சந்திரன், உள்ளூர் கணேசன், மிசா மனோகரன், அம்பிகாபதி, தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜி கே எம் ராஜா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…