in

பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்த சூர்யா


Watch – YouTube Click

பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்த சூர்யா

 

தமிழ் சினிமாவை தொலைநோக்கு பார்வையுடன் அணுகியவர் டைரக்டர் பாலா, ஒடுக்க பட்ட மக்களின் வாழ்க்கையின் மீது கவனம் செலுத்தி, மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்து வலிகளை திரை கதையாக வடிவமைத்தவர் பாலா, இவருடைய ஒரு படத்திலாவது நடிக்க மட்டோம்மா என்று தவம் கிடக்கும் பல நடிகர்கள் உண்டு.

டிசம்பர் 18, 2024 அன்று அருண் விஜய் நடித்த ‘வணங்கன்’ படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியின் போது பாலாவின் 25 ஆண்டுகால திரையுல சிறப்பை பாராட்டும் விழாவும் ஏற்படுத்தபட்டது.

இந்த நிகழ்வில் சூர்யா, சீயான் விக்ரம், கார்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். பாலாவை கவுரவிக்க அழைக்கபட்ட சூர்யா மைக்கை வாங்கி படபட..இன்னு பேசி தள்ளி … பாலா..வை கூல் பண்ணிட்டாரு.

நான் நெய்காரப்பட்டி படப்பிடிப்பிலிருந்தபொழுது எனக்கு ஒரு போன் வந்தது பேசியது பாலா சார் அடுத்து உன்னை வைத்து ஒரு படம் பண்ண போறேன்னு சொன்னாரு அந்த போன் பேசி முடித்த பின்ன தான் என்னோட வாழ்க்கையில் எல்லாமே மாறிப்போச்சு, காரணம் சேது படம் பெரும் தாக்கத்தை என் உள் உண்டாக்கியது இப்படி ஒரு இயக்குனர் இருக்க முடியுமா ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா என்று கேட்கும் அளவிற்கு நூறு நாட்களை கடந்து சேது படம் ஓடியது.

பிதாமகன் செட்…டில் பாலா சார் கிட்ட நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன் பாலா சார் மட்டும் அன்னைக்கி போன் பண்ணலனா இன்னைக்கு நான் ஒண்ணுமே இல்ல. காக்க காக்க படம் பார்த்துட்டு முருகதாஸ் கஜினி படம் பண்ண கூப்பிட்டார், இது…க்கு காரணம் பாலா அண்ணன் தான்.

நந்தா படத்தில் ஒரு காட்சியில் ஸ்மோக் பண்ணனும் ஆனால் எனக்கு தம் அடிக்க தெரியாது எனக்கு கற்றுக் கொடுத்ததே பாலா சார் தான் 300 முறை நான் தம் அடித்த பிறகு தான் ஸ்மோக் பண்ணவே கத்துக்கிட்டேன்.

அந்த அளவிற்கு ஒரு கதாபாத்திரம் நேச்சுரலாக இருக்க வேண்டும் என்று உழைப்பவர் பாலா சார் இடையிலே குறுகிட்ட இயக்குனர் பாலாவும் தம்பி முன்னாடி நான் எப்பவுமே தம் அடித்ததில்லை மானிட்டருக்கு பின்னாடி தான் போய் ஸ்மோக் பண்ணுவேன் ஆனால் அதை கண்டுபிடித்து இத்தனை தம் அடிச்சீங்க..Correct…டா இன்னு .நான் எத்தனை சிகரெட் அடித்தேன் …இன்னு சரியாக சொல்லிவிடுவார்.

வணங்கான் படத்தின் மூலம் இருவருக்கும் மேற்பட்ட மனக்கசப்பு இந்த நிகழ்ச்சியின் மூலம் சூர்யா சரி பண்ணிடார். இருவருக்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. எதிர்காலத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

மூழ்கும் கப்பலில் எலிகள் இருக்காது – எச்.ராஜா திருச்சியில் பேட்டி

நடிகர் கோதண்டராமன் மறைவு