அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் டாக்டர். அம்பேத்கரை அவமதித்து பேசிய மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாடாளுமன்றத்தில் டாக்டர். அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் அம்பேத்கர் திருவுருவ பதாகைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.