கதாநாயகனாக ரோபோ சங்கர்
சின்னத்திரை நகைச்சுவை நடிகர், மாரி படத்தின் முலம் வெள்ளி திரைக்கு சென்ற ரோபோ சங்கர் கதாநாயகனாக அம்பி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
முழுக்க முழுக்க காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட் கதையான இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் அம்பி… யாக இருக்கும் ரோபோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீரன், அதிர்ஷ்டசாலி, என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
இதனால் சூழ்நிலை கைதியாக மாட்டிக் கொண்ட நாயகன் இறுதியில் தைரியசாளியாக மாறினாரா அல்லது அம்பியாகவே வாழ்கிறாரா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை ஜே.எல்வின் டைரக்ட் செய்கிறார். இவர்களுடன் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.