16-ம் ஆண்டு கருட பஞ்சமி விழா 10108 மகா சகஸ்ர தீப வழிபாடு கருட சேவை
நாமக்கல் சேந்தமங்கலம்ஸ்ரீலட்சுமி நாரயணபெருமாள் ஆலயத்தில் 16-ம் ஆண்டு கருட பஞ்சமி விழா 10108 மகா சகஸ்ர தீப வழிபாடு கருட சேவை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயமான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ கருட பஞ்சமி விழா தினத்தை முன்னிட்டு நேற்று இரவு 10108 மகா சகசர தீப நிகழ்வும் கருட சேவை மிக விமர்சையாக கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் நடைபெற்றது.
முன்னதாக மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளுக்கும் பெரிய திருவடி கருடாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது மாலை திருக்கோவில் முழுவதும் பக்தர்கள் 10108 மகா சகசர தீப விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
பின்னர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கருட சேவையில் மங்கல இசை முழங்க திருக்கோவிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயில்வசந்த மண்டபத்தில்சுவாமி திரு உருவங்கள் வைக்கப்பட்டு இருந்தன இதை ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
மேலும் கோவில் முன் பக்தி நடன நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கருடா திரி பக்த குழு சார்பாக மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.