சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இடைத்தரர்கள் ஆதிக்கம்…
தலைக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் சாமி தரிசனம் செய்ய குறுக்கு வழியில் அழைத்துச் செல்வோம் என பக்தர்களுடன் பேரம் பேசும் வீடியோ வெளியீடு
தமிழகத்தில் இருக்கும் மாரியம்மன் கோயில்களில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து செல்கின்றன.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஏராளமான சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களும் மாரியம்மன் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் சபரிமலை சீசனை பயன்படுத்தியும், ஏராளமான பக்தர்கள் குவியவதை பயன்படுத்தும் கோவிலில் பணிபுரியும் நிர்வாகிகளை கையில் போட்டுக்கொண்டு ஒரு சில இடைத்தரகர்கள், பக்தர்களை மடக்கி உங்களை நேரடியாக சாமி பார்க்கக் கொண்டு செல்கிறேன் எனக் கூறி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை பார்த்து வருகிறார். குறிப்பாக ஒரு ஆளுக்கு 200 ரூபாய் கொடுங்கள் நேரடியாக தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என பேரம் பேசுகின்றனர்
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மடக்கி பேசி இருநூறு ரூபாய் கொடுத்தால் ஒருவரை நேரடியாக சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக அந்த வீடியோ காட்சியில் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடி பின்னணியில் கோவிலில் இருக்கும் அறநிலை துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் தற்போது பக்தர்களிடம் இடைத்தரகர்கள் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது….,!! இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது..!!