கும்பகோணம் அருகே பாபநாசத்தில் தஞ்சை -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரை 165 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சையில் முதல் கும்பகோணம் வரை தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் முன்னே சாலையில் விரிசல்கள் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளது.இந்நிலையில் சாலையை உடனே ஆய்வு செய்து தரமற்ற முறையில் போடப்பட்டுள்ள சாலையை உடனே சீரமைப்பு செய்து தரமற்ற சாலை அமைத்து ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் , தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கையில் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..