in

விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாறில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்

விருத்தாச்சலம் அருகே மணிமுத்தாறில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்

உயிரிழந்த அருள் பாண்டியனின் உறவினர்கள் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் நெடுஞ்சாலையில் உருண்டு புரண்டு சாலை மறியல்

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எஸ்எம்எஸ் ஆபரேட்டராக பணியாற்றி வந்த 24 வயதான அருண்பாண்டியன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தைச் சார்ந்த 24 வயதான அருள்பாண்டியன் என்ற இளைஞர் கடந்த 14 ஆம் தேதி நண்பர்கள் மணிகண்டன் சுபாஷ் ஆகியோருடன் வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் அருள்பாண்டியனை காணவில்லை என புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அருள்பாண்டியன் விருதாச்சலம் அருகே மணிமுத்தாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் தெரிந்த நிலையில் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த நிலையில் அருள்பாண்டியன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இறப்பில் சம்பந்தம் உடைய நபர்களை விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் காவல்துறையினர் மெத்தன போக்காகவும் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி உரிய நீதி விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாக காவல் துறையினரை கண்டித்து அருள்பாண்டியன் உறவினர்கள் மற்றும் கரிவேட்டி கிராமத்தை சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அருள் பாண்டியன் உடலையும் உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

What do you think?

மதுரை விக்கிரமங்கலத்தில் உள்ள தத்துவமஸி ஐயப்பன் கோவிலில் கன்னி பூஜை கூட்டு பிரார்த்தனை

சிதம்பரம் தில்லை காளி கோயில் உண்டியல் எண்ணப்பட்டது