பாபநாசம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் தர்மபுரம் ஆதினம் சாமி தரிசனம்
மார்கழி மாதத்தை முன்னிட்டு பாபநாசம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் தர்மபுரம் ஆதினம் சாமி தரிசனம்..
இந்த மாதங்களில் மட்டும் 300-கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இலக்கு..
மார்கழி மாதத்தை முன்னிட்டு பாபநாசம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் தர்மபுரம் ஆதீனம் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் இந்த மாதத்தில் 300-கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இலக்கமிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை மச்சப்புரீஸ்வரர் ஆலயம், சக்கராப்பள்ளி சக்கரவாகீஸ்வரர் ஆலயம், சூலமங்கலம் கீர்த்தி வாகீஸ்வரர் ஆலயம், பசுபதிகோவில் புள்ளமங்கை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தருமபுரம் ஆதினத்திடம் ஆசி பெற்றனர்.