in

நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 

நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் வகையில் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தான தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலை உருவாக்கி உள்ளதை குறிக்கும் வகையில் இந்தப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி மனமுருகி பிரார்த்தனை

கப்பம் கட்டாவிட்டால் நியாய விலை கடை பணியாளர்கள் பணியிடம் நீக்கம் தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி