in ,

சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

 

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு. திரளான பக்தா்கள் தாிசனம்.

நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரைப்பகுதியில் அமைந்துள்ள மணிமூர்த்தீஸ்வரம் என்னும் இடத்தில் சுமாா் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உச்சிஷ்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

ஒவ்வோா் மாதம் தேய்பிறை மற்றும் வளா்பிறைகள் வரும் அஷ்டமி திதியை பக்தா்கள் பைரவ வழிபாடாக சிறப்பாக கொண்டாடிவருகின்றனா். அனைத்து சிவாலயங்களிலும் சிவபூஜை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த சாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

ஆதிசங்கரர் தான் முதன் முதலில் வழிபாட்டு முறைகளைப் பிரித்து ஷண்மத ஸ்தாபனத்தை உருவாக்கியவர். அவற்றுள் ஒன்றான சாக்த வழிபாட்டில் உள்ளடங்கி உள்ளது தான் ஸ்ரீபைரவ வழிபாடாகும். தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவருக்கு மிகச் சிறப்பானதாகும்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு இன்று மாலை கும்பம் வைத்து யாகம் வளா்த்து பூா்ணாகுதி நடைபெற்றது.அதனை தொடா்ந்து பைரவருக்கு மாபொடி, மஞ்சள், பால், தயிா், தேன் இளநீா் வீபூதி, சந்தணம் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

 

தொடா்ந்து மகா கும்ப அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவா் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பைரவ அா்ச்சனைக்கு பிறகு கோபுர ஆரத்தி நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக பக்தா்கள் அகல் விளக்கு மற்றும் பூசணி விளக்கு ஏற்றி பைரவரை வழிபாடு செய்தனா். திரளான பக்தா்கள் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு பைரவா் பிரசாதமாக வடை தயிா்சாதம் போன்றவைகள் வழங்கப்பட்டன.

What do you think?

கப்பம் கட்டாவிட்டால் நியாய விலை கடை பணியாளர்கள் பணியிடம் நீக்கம் தலைவர் பாலசுப்ரமணியன் பேட்டி

ஆயிரத்தம்மன் கோவிலில் மார்கழி மாத மகாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள்