in

ஆயிரத்தம்மன் கோவிலில் மார்கழி மாத மகாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள்

ஆயிரத்தம்மன் கோவிலில் மார்கழி மாத மகாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள்

 

நெல்லை பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் மார்கழி மாத மகாஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத தேய்பிறை மகாகஷ்டமியை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்து அம்மன் திருக்கோவில் காவல் தெய்வமான பைரவருக்கு அஷ்டமி மகா சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதனை ஒட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து பைரவருக்கு மா பொடி மஞ்சப்பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

நெல்லை மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொல்லம் எடுத்துச் செல்லப்படுகிறது