சந்தோஷமே..இல்லாத இளமை காலம்
அண்மையில் வெளியான விஜய்யின் THE GOAT படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான மீனாட்சி சௌத்ரியை கொலை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி.
மீனாட்சி சவுத்ரி தெலுங்கில் நடித்த லக்கி பாஸ்கர் படம் செம போடு போட்டது மீனாட்சி சவுத்ரியால் ஹோம்லி கேரக்டரிலும் நடிக்க முடியுமா என்று வியக்கும் அளவிற்கு லக்கி பாஸ்கர் படத்தில் நடுத்தர குடும்பத்தில் வாழும் மனைவியின் உணர்வுகளை அப்பட்டமாக தனது நடிப்பில் பிரதிபலித்தார்.
மீனாட்சி சவுத்ரி தனது கடந்த கால வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். எனது இளமை காலம் படிப்பிலும் விளையாட்டிலும் மட்டுமே கரைந்தது நான் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் மிக குறைவு எனது அப்பா ஒரு ராணுவ வீரர் அதனால் வீடும் ஆர்மி போல தான் காட்சி அளிக்கும் எங்களை மிகுந்த கட்டுப்பாடுடன் வளர்த்தார்.
நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை பேட்மிட்டன், நீச்சல் என்று பயிற்சி கொடுத்தார். என் அப்பா கொடுத்த பொது அறிவு என்னை மெஸ் இந்தியாவாக அறிமுகப்படுத்தியது. ஆனால் நான் கதாநாயகியாக ஆவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்றார். எல்லா நடிகைகளும் சொல்லற அதே பதிலை இவரும் சொல்லிட்டார்.