in

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு

 

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம்; விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு துறை சார்ந்த வல்லுனர்கள் விளக்கமளித்தனர்:

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன் பல்கலைக்கழகம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை, கடல் சார்ந்த தொழில், மற்றும் மனையியல் சார்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் விளக்கங்களை அளித்தனர்.

நிகழ்ச்சியில் பனங் கிழங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட ஆட்சியர் வெட்டி விவசாயிகளுக்கு அளித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உருவாக்கப்பட்ட தொழில் முனைவோர் அவர்களுடைய தயாரிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து தேசிய விவசாயிகள் தினத்தை நினைவு கூறும் வகையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

What do you think?

எதிர்நீச்சல் சீரியல் கதையை கூறிய திருச்செல்வம்

17,000 வாசகர்கள் நூலகங்களில் படித்து பயனடைந்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் பேச்சு