செஞ்சியில் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா வெகு சிறப்பாக பள்ளி மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
எதிர்வரும் 25 ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இயேசு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் செஞ்சியில் உள்ள பள்ளியில் கிறிஸ்மஸ் விழா பள்ளி மாணவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாணவர்கள் இயேசு பிறப்பின் வரலாற்றை நாடகமாக நடித்தும் கிறிஸ்துமஸ் பாடலுக்கு நடனமாடியும் உற்சாகமடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் உள்ளிட்டோர் கேக் வெட்டி பள்ளி மாணவர்களுடன் கிறிஸ்மஸ் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்….