சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமிகள் தனுர் மாத தரிசனம்
கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனுர் மாத தரிசனம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணைக் கோவிலும் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற ஸ்தலமான சக்கராப்பள்ளி தேவநாயகி அம்மாள் சமேத சக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலுக்கு
தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்மாத தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனையும், மூலபிரகான சக்கராவரேஸ்வர் மற்றும் ஏனைய பரிகார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சூலமங்கலம் கீர்த்திவாகேஸ்வரர், பசுபதி கோவில் புள்ளமங்கை உள்ளிட்ட திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கிராம மக்கள் திருக்கயிலை சிவ பூத கணத் திருக்கூட்டம் சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.