in

விசாரணைக்காக வக்கீலுடன் வீட்டிலிருந்து காவல் நிலையம் புறப்பட்டு சென்றார் அல்லு அர்ஜுன்

விசாரணைக்காக வக்கீலுடன் வீட்டிலிருந்து காவல் நிலையம் புறப்பட்டு சென்றார் அல்லு அர்ஜுன்

 

புஷ்பா 2 திரைப்படம் வெளியீடு நாள் அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஒரு பெண்ணின் மரணம் ஆகியை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இரண்டாவது முறையாக விசாரிக்க ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்டப்பள்ளி காவல் நிலைய போலீசார் நேற்று அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

அந்த நோட்டீஸில் இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை ஏற்று அல்லு அர்ஜுன் தன்னுடைய வக்கீல் உடன் வீட்டிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம் சென்று கொண்டிருக்கிறார்.

அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு சிக்கடபள்ளி காவல் நிலையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

What do you think?

புஷ்பா 2 அல்லு அர்ஜுன் மீது வழக்கு யார் மீது யார் குற்றம் என சொல்ல முடியாது. – இசையமைப்பாளர் தேவா பேட்டி..

விளார் சாலை பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கும் பணி மேயர் சண்.ராமநாதன் பார்வை