மயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடைபெற்ற திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி
மார்கழி மாதத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடைபெற்ற திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமயக்குரவர்களால் பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து 16 வகை சோடச தீபாரதனை செய்யப்பட்டது. வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் திருப்பள்ளி எழுச்சி வேதம் பாடினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.