10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்பாட்டம்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமக மாவட்டச் செயலாளர் சித்திரவேல் தலைமையில் 10 .5சதவீதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேதாரணியம் கீழ்வேளூர் திருமருகல் உள்ளிட்ட பகுதியில் இருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு உரிய தரவுகளுடன் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி 1000 நாட்களாகியும் தமிழக அரசு அதனை கண்டுக்கொள்ளாததை கண்டித்தும் உரிய இட ஒதுக்கீட்டை அளிக்க கோரி கோஷங்களை தமிழக அரசுக்கு எதிராக. எழுப்பினார்கள். மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், கோபாலகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.