மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கலாச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கலாச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி: குடும்பத் தலைவன் கள்ளச்சாராயம் மோகத்தில் மூழ்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து தத்துவமாக நடித்த கலைக்குழுவினருக்கு பாராட்டு:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கலாச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நாகப்பட்டினம் மாவட்ட முழுவதும் நடைபெற்று வருகிறது.
கிராமப்புறங்களுக்கு சென்று கலாச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கிராமிய பாடல் நாடகம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கள்ளச்சாராயத்தில் மூழ்கி உள்ள குடும்ப தலைவனால் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படும் என்ற நாடகம் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது.