10.5% சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 10.5% சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு 10.5% வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கி ஆயிரம் நாட்கள் ஆன நிலையில் உரிய புள்ளி விவரங்களை தராமல் தமிழக அரசு வன்னிய மக்களை வஞ்சித்து வருவதை கைவிட்டு உடனடியாக உரிய புள்ளி விவரங்களை தந்து வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே வழங்க தமிழக அரசின் வலியுறுத்தி இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் ரயில்வே சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.