ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு குருபூஜை விழா
இடையமேலூர் அருள்மிகு ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இடையமேலூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருக்கோவிலில் 18 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மகேஸ்வர பூஜை வழிபாடு நடைபெற்றது இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மூலவர் சன்னதியில் அருள் பாலிக்கும் சிவலிங்கத்திற்கு தங்க கவசம் அணிவித்து வண்ண மலர் மாலைகள் கொண்டு அலங்கரித்தனர் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து மகேஸ்வர பூஜை வழிபாடு துவங்கியது தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னதானம் புது வஸ்திரம் மங்களப் பொருட்கள் அளித்து மரியாதை செய்தனர்.
இதில் சிவனடியார்கள் ஓம் நமசிவாய மந்திரங்கள் கூறி சங்கு முழக்கத்துடன் மகேஸ்வர பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை வாங்கி அன்னதானத்தை உட்கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.