in

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சித்தரிப்பு நிலையத்தால் பாதிப்பு ஏற்படும் என கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இதில் 32 வது வார்டு மடார்வளாகம் பகுதியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா விளையாட்டு திடல் அமைக்கப்பட்ட இடத்திலும் விவசாய பணிக்காக இருக்கும் நெற்களத்திற்கு அருகாமையிலும் புதியதாக நான்கரை கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஸ்டாலின் அரசின் நகராட்சி சார்பில் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மடவர் வளாகம் பகுதியில் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட உள்ளது என கூறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கழிவுநீர் சுத்தரிப்பு நிலையம் கொண்டுவரப்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுமார் 150-க்கும் மேற்பட்ட அப்பகுதி ஆண்கள் பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வாக்குவாதமானது. பின்னர் அரசு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையை அனுப்பி தீர்வு காணப்படும் என கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

What do you think?

ஸ்ரீ மாயாண்டி சித்தர் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு குருபூஜை விழா

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மத்திய இணை அமைச்சா் ஆய்வு