ஐஸ்வர்யா ராயின் ஜோதா அக்பர் லெஹங்கா ” அகாடமி மியூசியத்தில் இடம் பிடித்துள்ளது
ஐஸ்வர்யா ராய் மீண்டும் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார், 2008இல் வெளியான ஜோதா அக்பர் படத்தில் ஐஸ்வர்யா ராய் ராணியாக நடித்திருப்பார் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஒரு கிளிப்பைப் பகிர்ந்துள்ளது, ஜோதா அக்பரில் (2008) ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருந்த திருமண லெஹங்கா அகாடமி மியூசியதில் இடம் பிடித்துள்ளது.
அந்த படத்தில் திருமணக் காட்சியின் போது ஐஸ்வர்யா ராய் இந்த உடையை அணிந்திருந்தார். ஆஸ்கர் அகாடமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
“ராணிக்கு ஏற்ற லெஹங்கா” என்று தலைப்பிட்டு, ராணிக்கு இந்த லெகங்கா உடை மேலும் அழகை கூட்டி உள்ளது மனதை கவர்ந்த இந்த உடையை ஆஸ்கார் மியூசியத்தில் வைத்திருக்கிறோம் இது சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் என்று பதிவிட்டுள்ளனர்.
சிவப்பு நிற லெஹங்கா கண்களுக்கு விருந்தாக இருக்கிறது, ஜர்தோசி எம்பிராய்டரி, மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கைவினைத்திறனுடன் மறைக்கப்பட்ட ரத்தினங்களால் உடையை உற்றுப் பார்த்தால் முழுக்க முழுக்க நகைகளால் செய்யப்பட்ட இந்தியாவின் தேசியப் பறவையான மயிலும் இடம்பெற்றிருக்கும்.
இந்த திரைப்படத்திற்காக நீதா லுல்லா ஆடையை வடிவமைக்கவில்லை; அவர் ஒரு பாரம்பரியத்தையே உருவாக்கினார். மியூசியத்தில் இடம்பெற்றுள்ள லெகங்கா முதல் இந்திய பாரம்பறிய உடை என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய் அணிந்த இந்த உடையால் அவருக்கும் மட்டுமல்ல உடைக்கே தனி மதிப்பும் பெருமையும் கூடிவிட்டது.