மார்கழி மாதத்தையொட்டி, திருவாவடுதுறை ஆதினம் ஐயாரப்பர் ஆலயத்தில் வழிப்பாடு
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் ஐயாரப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமானது..
திருவாவடுதுறை ஆதினம் மார்கழி மாதம் முழுவதும் ஆதினத்திற்கு கட்டுப்பட்ட அனைத்து சிவன் ஆலயத்திற்கும் சென்று வழிப் படுவது வழக்கம்.
அதையொட்டி நேற்று மயிலாடுதுறையில் உள்ள ஐயாரப்பர் ஆலயத்தில் திருவாவடுதுறை ஆதினம் 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சரிய சுவாமிகள் ஐயாரப்பரை வழிப்பட்டு, திருக்குளத்தில் மீன்களுக்கு உணவிட்டு பசுமாடுகளுக்கு உணவு கொடுத்து, ஆலய தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கோயிலில் மேளதாளம் முழங்க ஆதினகர்த்தருக்கு வரவேற்பு கொடுத்து, சிவாச்சாரியார்கள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்தனர். பக்தர்கள் கலந்து கொண்டு ஆதினத்திடம் அருளாசி பெற்றனர்.