கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மௌன அஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கிய தேமுதிகவினர். ஆடுதுறை பேரூராட்சியில் நடந்த மௌன அஞ்சலி நிகழ்வில் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய மகளிர்.
மறைந்த முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ப.சுகுமார் ஏற்பாட்டில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதியில் விஜயகாந்த அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக ஆடுதுறை சங்கடியில் இருந்து தேமுதிக, திமுக, அதிமுக, அதிமுக உரிமைகள் மீட்புக்குழு, மதிமுக, பாமக, வன்னியர் சங்கம், தவெக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து விஜயகாந்த் அவர்கள் நடித்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்ட போது மகளிர் நிர்வாகிகள் மற்றும் தேமுதிகவினர் கண்ணீர் சிந்திய காட்சி விஜயகாந்த் மறைவிற்கு பிறகும் அனைத்து மக்களிடமும் வாழ்ந்து வருகிறார் எனும் எண்ணத்தை வரவழைத்தது. தொடர்ந்து ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருபுவனம், திருப்பனந்தாள், அணைக்கரை, பந்தநல்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் செல்வ,ம் முருகன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் தவச்செல்வி, பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.