மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கொள்ளிடம் ஆற்றல் மாட்டு வண்டிக்கான மணல் குவாரி உடனடியாக திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த முள்ளங்குடி, கொத்தங்குடி நடுபடுகை, கோவிந்தநாட்டுசேரி, மருவூர், கோயிலடி, திருச்செண்ணம்பூண்டி ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறப்பதற்கான நடவடிக்கை தமிழ்நாடு அரசு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியூ மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர்.