விரைவில் சின்னத்திரை..யில் ரம்பா
90களில் தனது ஆட்டத்தால் ரசிகர்களை தியேட்டரிலே ஆட வைத்த நடிகை ரம்பா பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சொந்தமாக படம் எடுத்து சுட்டுகிட்டவர், உச்சத்தில் இருக்கும்போது இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேறி ரம்பா கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் தொழிலதிபரான இந்திரகுமார் பத்மநாதனை, 2010 ஆம் ஆண்டு மணந்து டொராண்டோவில் குடியேறினர்.
இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இருவருக்கும் உள்ள மனப்பிரச்சினை காரணமாக இந்தியா வந்தவர் விஜய் டிவியின் Kings of Comedy Juniors நிகழ்சியில் தலைகாட்டினார்.
திரும்பவும் சமரசமாகிய தன் குடும்பதுடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தனது கணவரின் பிசினஸை பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் கொடுத்த பேட்டையில் நல்ல கதை கிடைத்தால் தமிழில் மீண்டும் நடிக்க ரெடி என்றார்.
விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் ஏக வரவேற்பு கிடைத்த நிலையில் சென்ற சீசன்..னை சாண்டி மாஸ்டர், ஸ்ரீதேவி மற்றும் மீனா நடுவராக இருந்து சிறப்பித்தனர்.
அடுத்த சீசனில் ரம்பா நடுவராக வர இருக்கிறார், நீண்ட வருடங்களுக்கு பிறகு ரம்பாவின் தரிசனதை எதிர்பார்த்து ரசிகர்கள் வெயிட்டிங்…