in

ஹிந்தி நடிகர் சைஃப் அலி கானை…. குத்திய நபர் பிடிபட்டார்.

ஹிந்தி நடிகர் சைஃப் அலி கானை…. குத்திய நபர் பிடிபட்டார்.

ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் மர்ம நபரால் முதுகுத்தண்டு, கழுத்து, கைகளில் கத்தியால் தாக்கப்பட்டார். சைஃப் அலி கானின் வீட்டில் பணிபுரியும் மூன்று உதவியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரீனா கபூர்..ரின் கணவரான நடிகர் சைஃப் அலி கான் மும்பை பாந்திரா பகுதியில் உள்ள சத்குரு சரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை சுமார் 2 மணி அளவில் அவரது வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்திருகிறார். சத்தம் கேட்டு வெளியே வந்த அலி கான் அந்த நபரை பிடிக்க முற்பட்ட பொழுது அவரை கத்தியால் சரமாரியாக ஆறு இடங்களில் குத்தி விட்டு தப்பிஇருக்கிறார்.

லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட. சைஃப் அலி கான் தற்போது ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது. இச்சம்பவம் மும்பை மாநகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தப்பிய நபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர் .நேற்று முன்தினம் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அவர் தாக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்ததால் போலீஸ் மீண்டும் விசாரனையை தீவிர படுத்திய நிலையில் மும்பையை அடுத்த தானே பகுதியில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்க போலீஸ் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து காட்டு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவரை கைது செய்தனர் .இவர் ஆறு மாதங்களுக்கு முன் சட்ட விரோதமாக வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது

What do you think?

விஷாலின் உடல்பாதிப்பிற்கு நான் காரணமா ?

பல விருதுகளை தட்டி சென்ற கோழிப்பண்ணை செல்லதுரை