வளர்ச்சி மக்களை அழிக்க கூடாது …உங்களது மகனாக இந்த போராட்டத்தில் உங்களுடன் நிற்பேன்…. பரந்தூரில் ஆவேசமாக பேசிய விஜய்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது இதற்காக பரந்துறை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5000 க்கு மேற்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய உள்ளது. விளைநிலங்களாகவும், ஏரி, குளம் இருப்பதால் இந்த திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர் .இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மக்களே பார்க்கவும் அவர்களுடன் உரையாடவும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார்.
ஆனால் போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏகனாபுரம் திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களையும் தொண்டர்களையும் விஜய் சந்திக்க திட்டம் இட்டார். வீனஸ் திருமண மண்டப வளாகத்தில் போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் நிற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களின் நடுவில் விஜய் நேற்று பேசினார். காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் பகல் 12 மேல் திருமண மண்டபத்தை அடைந்து விவசாயிகள் அணிவித்த பச்சை துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு நடிகர் விஜய் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து .பேசுகையில் 90 நாட்களுக்கு மேலாக மன்னனுக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் நியாயமான உங்கள் போராட்டத்தை பற்றி அறிந்ததும் நான் உங்ககளை சந்திக்க நினைத்தேன் .உங்கள் அனைவருடனும் நிற்பேன் இந்த நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள் அதனால் விவசாயிகளுடைய காலடி மண்ணைத் தொட்டு கும்பிட்டு விட்டு என்னுடைய பயணத்தை தொடங்க முடிவு செய்ய நினைத்தேன் அதற்காக தான் இந்த இடத்திற்கு வந்தேன் என்னை உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு மகனாக நினைத்து என்னை ஆசீர்வதித்து எனது அரசியல் பயணத்தை இங்கிருந்துதான் தொடங்க நினைக்கிரேன் .
விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் எனது கட்சியின் மிக முக்கிய கொள்கை . காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை அழித்து சென்னையை நிரந்தர வெள்ள கடாக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன் அது மட்டுமல்ல இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நமது விவசாயிகளுக்காகவும் சட்ட போராட்டம் நடத்தவும் நான் தயங்க மாட்டேன் .இந்த பிரச்சனையில் உங்களோடு நான் இருப்பேன் என்ற உறுதியை அளிக்கின்றேன் என்று கூறியுள்ளார் .
சமீபத்தில் அரிட்டாபட்டி பகுதியில் tungsten சுரங்கம் அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது .அதை போல் பரந்தூர் மக்கலை பற்றி யோசித்து அரசாங்கம் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் ஆனால் இந்த அரசு அப்படி செய்யவில்லை ,அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது அதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த இந்த கட்சி ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவது இருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை இந்த திட்டத்தை மதியம் மாநில அரசும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் பாதிப்பு இல்லாத இடங்களை பார்த்து விமான நிலையங்களை அமைக்க வேண்டும் வளர்ச்சி தான் மக்களை முன்னேற்ற வேண்டும் ஆனால் அந்த வளர்ச்சி மக்களை அழிக்க கூடாது என்று பேசினார்.