திருச்சி டிஐஜி வருண்குமார் சீமான் மீது தொடர்ந்த வழக்கில் வருகிற 19.02.2025 ஆம் தேதி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு
திருச்சி டிஐஜி வருண்குமார் சீமான் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்க திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் நீதிபதி முன் சத்திய பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.
கடந்த 1.7 2024 ஆம் தேதி அன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது அவதூறாக கருத்துக்களை பரப்பி விடுவதும் சமூக வலைத்தளங்களில் பரவ விடுவதும் மேலும் அவரது மனைவி குடும்ப உறுப்பினர்களை அறுவறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாதிய ரீதியாக எஸ்.பியையும் அவரது குடும்பத்தினர் குறித்து மிரட்டல் தொணியில் சீமான் பேசினார்..
இதற்கு அப்போது பதவி வகித்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வழக்கறிஞரின் மூலம் நோட்டீசை கொடுத்தார். அதற்கு அவர் வேறு ஒரு வழக்கறிஞரை வைத்து 22.8.2024 ஆம் தேதி பதில் அனுப்பி அதில் எனது வழக்கறிஞர் எனக்கு தெரியாமல் தகவலை அனுப்பி விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
15 பக்க அந்த அறிவிப்பை தனக்கும் சீமான் அவர்களுக்கும் இந்த நோட்டீஸ் சம்பந்தம் இல்லை என்று குறிப்பிடுகிறார். இதையடுத்து ஒன்றரை பக்க அளவில் அடுத்து ஒரு விளக்கத்தை சீமான் அனுப்புகிறார். அதில் நாங்கள் சம்பந்தப்பட்ட கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சீமான் குறிப்பிடவில்லை என எஸ்.பி யின் வழக்கறிஞர் தற்பொழுது நவநீதகிருஷணன் இதையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் அவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு 26.12.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டது..
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த நீதிபதி பாலாஜி ஏற்றுக்கொண்டு உள்ளார். சீமான் பேசியதில் தண்டனைக்கு உள்ளாக கூடிய குற்றங்கள் இதில் உள்ளது என நீதிபதி இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். 30.12.2024 ஆம் தேதி இன்று திருச்சி சரக டிஐஜி வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
டிஐஜி வருண் குமார் சார்பில் மூன்று பேர் சாட்சியம் அளித்த போது சாட்சிகளை நீதிபதி பாலாஜி விசாரித்தார். அவர்களிடம் வாக்குமூலம் பெற்றார்.
இன்று 3 வது சாட்சியை விசாரித்த பிறகு நீதிபதி பாலாஜி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வருகிற 19.02.2025 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.