in

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை.

மத்திய குழு நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது மட்டும் ஆய்வு செய்யாமல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நெல்லுடன் விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடி, பூதலூர், வண்ணாரப்பேட்டை தென்னங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அறாவடைக்கு தயாராக இருந்த சம்பா – தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் பயிர்கள் தொடர் மழையால் கருக்காவாகி போனதால், சுமார் 80 சதவீதம் நெல் பயிர்கள் வீணாகிப் போய்விட்டது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயிருடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி இந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக இன்று டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்கிறது. ஆனால் அதனை மட்டும் ஆய்வு செய்யாமல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்தும் கணக்கீடு செய்ய வேண்டும். அதற்கு வேளாண் துறை அதிகாரிகள் மத்திய குழுவை பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு 35,000 முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்துள்ளனர்..

What do you think?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதாந்திர உதவித்தொகையை கூடுதலாக வழங்கி கோரி மாநிலம் தழுவிய சிறை நிரப்பு போராட்டம்

நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார் அணிவது ஒத்திகையில் ஈடுபட்டனர்.