in

நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து 6184.46 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 6 மற்றும் 7 – ந்தேதி நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்பட 6184.46 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நெல்லையில் தெரிவித்துள்ளார்

நெல்லை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார் அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சரும் திருநெல்வேலி வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சருமான கே என் நேரு, நேரில் ஆய்வு செய்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் 6- ந்தேதி மதியம் 11 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக முதல் அமைச்சர் வருகை தருகிறார்.

தொடர்ந்து நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா சோலார் நிறுவனத்தினை பார்வையிட்டு திறந்து வைக்கிறார் அதன் பின்னர் கங்கைகொண்டான் பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் உணவு பதப்படுத்தும் மையத்தினை திறந்து வைக்கிறார். பின்னர் நெல்லை மாநகர பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சந்தை கட்டிடங்களை திறந்து வைத்து தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

7 ஆம் தேதி காலை தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி நம்பியாறு கருமேணி ஆறு இணைப்பு திட்டத்தினை நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழி பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 30,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை சுமார் 203.71 கோடி மதிப்பில் வழங்குகிறார். அன்றைய தினம் மதியம் சென்னைக்கு விமான மூலம் முதலமைச்சர் புறப்பட்டு செல்கிறார். ஆறு மற்றும் ஏழு ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் 6184.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல்,புதிய தொழில் நிறுவனங்களை திறந்து வைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நகர்ப்புற பகுதிகளில் தாமதமாக வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அதற்கான தீர்வு விரைவில் காணப்படும். மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசு கடன் வாங்க முடியும். கடனை வாங்கி திருப்பி கட்டுவதற்கான திறன் இருந்தால் மட்டுமே கடன் வாங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும். ஒரு மணி நேரம் செய்தியாளர்களை சந்தித்து நிதி அமைச்சர் கடன் சுமையில் தமிழக அரசு இருக்கிறது என எதிர் கட்சித் தலைவர் தெரிவித்ததற்கு விளக்கத்தினை அளித்துள்ளார். தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொண்டு வருவதால் செலவாகிறது வரவு வருவதால் அதனை மீண்டும் கட்டி வருகிறது என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை கிழக்குமாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் ராமகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர்கள் வசந்தம் ஜெயகுமார், முத்துசெல்வி, மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா, மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்ஹதிமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சிறைநிரப்பு போராட்டம்

ஸ்ரீ உஷ்சிட்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு