in

ஸ்ரீ உஷ்சிட்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஸ்ரீ உஷ்சிட்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு. திரளான பக்தா்கள் பங்கேற்பு.

ஒவ்வோா் மாதம் தேய்பிறை மற்றும் வளா்பிறைகள் வரும் அஷ்டமி திதியை பக்தா்கள் பைரவ வழிபாடாக சிறப்பாக கொண்டாடிவருகின்றனா். அனைத்து சிவாலயங்களிலும் சிவபூஜை என்பது காலையில் சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த சாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகச் சிறப்பான வழிபாடாகும்.

நெல்லை மாநகா் தாமிரபரணி கரையில் அமைந்துள்ள உஷ்சிட்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலய மண்டபத்தில் கும்பம் வைத்து யாகம் வளா்த்து பூா்ணாகுதி நடைபெற்றது.அதனை தொடா்ந்து பைரவருக்கு மாபொடி, மஞ்சள் பொடி, வாசனைபொடி பால், தயிா், இளநீா் வீபூதி, சந்தணம் என பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கும்பம் எடுத்து வரப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்கள் தங்கள் வேண்டுதலுக்காக தீபங்கள் ஏற்றினா். கவசங்கள் சாற்றி வண்ண மலா்மாலைகள் வடைமாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் சொா்ண ஆகா்ஷண பைரவா் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஸ்ரீவைரவருக்கு அா்ச்சனை நடைபெற்று நட்சத்திர ஆரத்தி பஞ்சதட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தாிசனம் செய்தனா். வந்திருந்த பக்தா்களுக்கு பைரவா் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

What do you think?

நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து 6184.46 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

திமுகவை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக இல்லை நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது