in

திமுகவை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக இல்லை நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது

திமுக நாடகம் ஆடுவதாக நடிகர் விஜய் பரந்தூரில் பேசுகிறார் அவரது தந்தைக்கு வசனம் எழுதி நடிக்க வைத்து அறிமுகம் செய்தவர் கலைஞர் தான், திமுகவை எதிர்த்தவர்கள் வாழ்ந்தாக இல்லை பழைய வரலாறு நிறைய உண்டு , சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை சீமான் பயன்படுத்த கூடாது அவர் போர்ஜரியாக பெயரை பயன்படுத்துகிறார்.

நான் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது என நெல்லையில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பகுதி செயலாளர் அன்டன் செல்லத்துரை ஏற்பாட்டில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அருள்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக சட்டத்துறை இணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான்ஙாகியோ சிறப்பு அமைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி தமிழகத்தில் ஆட்சி செய்யும் முக ஸ்டாலின் 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனையை செய்து முடித்துள்ளார்.

மகளிருக்கு உரிமை தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வர் கொண்டுவந்துள்ளார். தாய்மார்கள் நன்றி மறவாதவர் என்ற அடிப்படையில் இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாய்மார்களை மதித்து உணர்ந்து ஆட்சி நடத்தியவர் தான் முன்னாள் முதல்வர் கலைஞர். நாடாகமாடுவதில் திமுக கைதேர்ந்தவர்கள் என நேற்று முலைத்தவரெல்லாம் சொல்கிறார். அவரும் ஒரு நடிகர் என்பதை மறக்ககூடாது.முன்னால் முதல்வர் கலைஞர் எழுதிய வசனத்திற்கு அவரது அப்பா தான் டைரக்சன் செய்து கொண்டிருந்தவர், வசனம் எழுதி, நடிக்க வைத்து அறிமுகம் செய்தவர் கலைஞர்தான் என்பதை மறந்துவிடக் கூடாது .திமுகவை எதிர்த்தவர்கள் வாழ்ந்த்தாக இல்லை, பழைய வரலாறு நிறைய உண்டு , முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

சசிகலா என்ற பெண்மணி போட்ட பிச்சையால் முதல்வர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. கலைஞர் மறைந்த போது மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தவர், வாழ் நாள் முழுதும் பல தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சமாதி கட்டி கொடுத்தவர் கலைஞர்தான் என்பதை மறக்ககூடாது. வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊர் ஊராக வந்து மோடி பொய்யாக பேசி சென்றார்.

அத்தனையும் சந்தித்து 40/40 நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மகளிர் தான் காரணம். எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாக தேர்தலில் செயல்பட்டவன் நான்.தமிழகம் முழுதும் கலைஞருடன் பிரச்சாரம் செய்தவன், எம்.ஜி.ஆர் பிரச்சார இடத்திற்கு வந்துவிட்டால் புற்று ஈசல் போல் சாரை சாரையாக மக்கள் கூட்டம் வந்துவிடும். எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் இப்போது மு.க ஸ்டாலினுக்கு மகளிர் கூட்டம் அதிகமாக வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆண்கள் வாக்குகளை விட பெண்கள் வாக்குகள் தான் அதிகமாக திமுகவுக்கு வந்தது.பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100 க்கு 90 சதவீத வாக்கு திமுகவுக்கு கிடைத்தது.

மக்கள் ஆதரவை தாங்கி கொள்ளமுடியாமல் வயிற்றெச்சலில் எடப்பாடி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்.அதிமுக ஆட்சியில் டிஜிபியால் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பில்லாத நிலை இருந்தது.அதிமுக ஆட்சியில் பல மோசமான செயல்கள் நடந்தது.அதனை கிளறினால் நீங்கள் தாங்கமாட்டேர்கள் . தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார்.சட்டபடி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது..

நாம் தமிழர் கட்சியை 1969 ல் சி.பா அதித்தனார் திமுகவில் இணைத்துவிட்டார்.சீமான் போர்ச்ஜியாக நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்துகிறார்.நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்தமுடியாது.பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார்.விடுதலை புலிகள் பிரபாகரன் அவரது சீடர்கள் 48 பேரை ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி திமுக என்பதை சீமான் மறக்ககூடாது. பிரபாகரனையும் விடுதலை புலிகளையும் காப்பாற்றியது திமுக.மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கலைஞரையோ பெரியாரையோ இனி சிமான் பேசினால் ஒருவன் சாகதுணிந்தால் உன் நிலைமை என்ன என்பதை யோசிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார்.ஸ்டாலின் வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார்.தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகாராக கனிமொழி முயற்சியால் மாற்றியுள்ளார்.பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.

விமான நிலைய பிரச்சினை குறித்து முன்னபின்ன விசாரிக்காமல் விஜய் பேசுகிறார்.பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 51% திமுகவுக்கு தான் விழுந்துள்ளது.இதில் திமுகவை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம்.பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட திமுகவிற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது . யார் என்ன சொன்னாலும் மகளிர் திமுக பக்கம் உள்ளனர், 2026- ல் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக்க உறுதிஏற்போம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், திமுக மூத்த முன்னோடி சுப.சீத்தாராமன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் , மேயர் ராமகிருஷ்ணன், தொகுதி பார்வையாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், முத்துசெல்வி , பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்…

What do you think?

ஸ்ரீ உஷ்சிட்ட கணபதி ஆயலத்தில் அமைந்துள்ள சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

ஆழ்வாா்களில் முதன்மையானவரான சுவாமி நம்மாழ்வாா் அவதார ஸ்தலத்தில் திருஅத்யயன உற்சவம் நிறைவு விழா