கொள்ளார் ஸ்ரீ சக்திமிகு பால விநாயகர் ஆலய அஷ்டபந்தனம் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் கொள்ளார் கிராமம் ஸ்ரீ சக்திமிகு பால விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை இரண்டாம் கால பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தத்துவார்சனை, நாடி சந்தானம், 108 திரவிய பொருட்களைக் கொண்டு ஹோமங்கள் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து பூர்ணாஹதி செலுத்தி பஞ்சமுக தீபாரனை மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் யாத்ராதானம் கடம்புறப்பாடு காலை ஒன்பது 45 மணியளவில் கோயிலின் கருவறை விமானத்திற்கு வந்தடைந்தது.
தொடர்ந்து ஸ்ரீ பால சக்தி மிகு விநாயகர் ஆலய கோபுரம் மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பால விநாயகருக்கு பூஜிக்கப்பட்ட கலச நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்