புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் பழமை மாறாமல் புணரமைக்கப்பட்டு வரும் 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பழமையான புகழ்பெற்ற 108 வைணவ தளங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 2கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்ற பிப்ரவரி மாதம் 2ம் தேதி கும்பாபிஷேகம் கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜைகள் 29ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் ஆலயத்தில் நடைபெற்ற வரும் திருப்பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கோவிலில் ஆய்வு செய்து பின்னர் சுவாமி தரிசனத்தின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோவில் ஆலயம் பழமை மாறாமல் சுண்ணாம்பு கலாக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.