in

உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி

விருத்தாசலம் அருகே கோ ,பூவனூர் கிராமத்தின் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து கீரை வியாபாரி பலி

கடலூர் மாவட்டம்விருத்தாசலம் அருகே கோ, பூவனூர்கிராமத்தின் உளுந்தூர்பேட்டை விருதாச்சலம் நெடுஞ்சாலையில்உளுந்தூர்பேட்டை அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்த குள்ளன் மகன்விநாயகம் (45)என்பவர்விருத்தாசலத்தில் கீரை வியாபாரம் செய்துவிட்டுதனது இருசக்கர வாகனத்தில்வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது நெடுஞ்சாலையின் அருகில் உள்ள ஆலமரக் கிளைதிடீரென முறிந்து விநாயகம் ஒட்டி வந்தஇருசக்கர வாகனத்தின் மேல்விழுந்ததில்விநாயகம் மரத்திற்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து முறிந்து விழுந்த கிளையை அகற்றி அவரது உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்

இனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும்பொதுமக்கள் அங்கே கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What do you think?

கடலூர் புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருட அபிஷேக விழா நடைபெற்றது