in

செஞ்சி சேத்பட் சாலையில் முனிஸ்வரன் கோயில் அருகில் போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சேத்பட் சாலையில் முனிஸ்வரன் கோயில் அருகில் போக்குவரத்து துறை சார்பில் 36-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செஞ்சி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தலைமையில் தலைக்கவசம் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை செஞ்சி சரக துணை கண்காணிப்பாளர் கார்த்திக பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ் கலந்து கொண்டு பாதுகாப்பாக வாகனம் இயக்குவது குறித்தும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்வதன் பயன் குறித்தும்,இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே எனவும், இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்யும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும்,ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க கூடாது எனவும்,சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

What do you think?

சாமியார்பட்டி அருள்மிகு ஶ்ரீ வாராஹி அம்மன் திருக்கோவில் தை மாத தேய்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேக ஆராதனை

புயல், மழையால் பாதிக்கப்பட்ட 13,000 விவசாயிகளுக்கு 25 கோடி ரூபாய் நிவாரணம்