in

புயல், மழையால் பாதிக்கப்பட்ட 13,000 விவசாயிகளுக்கு 25 கோடி ரூபாய் நிவாரணம்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட 13,000 விவசாயிகளுக்கு 25 கோடி ரூபாய் நிவாரணம்..முதல் அமைச்சர் ரங்கசாமி ஆணை வழங்கினார்.

பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் வரலாறு காணாத மழை பெய்தது.தென்பெண்ணை, சங்கராபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கிராமப்புற பகுதிகளை நீரில் மூழ்கடித்தது. 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்து வயல்வெளிகள் நீரில் மூழ்கின. புதுச்சேரி,ஏனாம், காரைக்காலில் 9 ஆயிரத்து 981.72 எக்டேர் விவசாய பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தது.

மொத்தமாக 13,000 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 12000 ரூபாய் என
25 கோடி ரூபாய் நிவாரணம் விவசாயிகளின் வங்கி கணக்கிலும் செலுத்தப்படுகிறது. வங்கியில் நிதி செலுத்துவதற்கான ஆணையை சட்டசபையில் முதல் அமைச்சர் ரங்கசாமி, விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார்,முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி ஏழை எளிய விவசாயிகளின் நஷ்டத்தை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மாகியை தவிர்த்து புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.நெற்பயிர் முதல் வாழை வரை அனைத்து பயிர்களுக்கும் 13 ஆயிரம் விவசாயிகளுக்கும் 25 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது என்றார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்திற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் விடுபட்ட தொகை 13 கோடி ரூபாயை இந்த அரசாங்கம் அளித்துள்ளது என தெரிவித்த அமைச்சர்,மின்துறை தனியார்மயம் ஆகிவிடும், விவசாயிகள் நடுத்தெருவில் விட்டுவிடுவார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் அந்த அச்சத்தை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான நிவாரணத்தை மின்துறைக்கு அளித்து அரசு அளித்துள்ளது.தற்போதைய எங்களது அரசு சொன்ன அனைத்தையும் செய்துவிட்டது. தேர்தல் அறிக்கையில் சொல்லாததை கூட அரசு செய்து முடித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் என்பதை தேர்தல் அறிக்கையில் கூறவில்லை ..ஆனால் அதை நாங்கள் செய்து முடித்து இருக்கிறோம் ..கடந்த காங்கிரஸ் அரசு செய்யாததை கூட நாங்கள் செய்துள்ளோம் …
மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் புதுச்சேரி தான் ..மழை நிவாரணத்துக்கு மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை.. இருப்பினும் மாநில நிதியை கொண்டு இந்த நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அடுத்த உற்பத்திக்கு தயாராக வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் தான்… இந்த நிதியை அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஊனமுற்றோருக்கு 3500 உயர்த்திக் கொடுத்தது இந்த அரசு மட்டும்தான் அதனால் குறை சொல்ல முடியாத வகையில் அரசு செயல்படுகிறது. சலுகை பெற்றவர்கள் உதவி செய்தாலே இந்த அரசு மீண்டும் ஆட்சியில் அமரக்கூடிய தகுதி எங்களுக்கு உள்ளது என வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்தார் .

What do you think?

செஞ்சி சேத்பட் சாலையில் முனிஸ்வரன் கோயில் அருகில் போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி..ஜாலி ஹோம்ஸ் நிறுவனம் புருனே இயக்கிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது