சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு
22 வருடம் திரை உலகில் பிரபலநாயகியாக தன் இடத்தை தக்க வைத்திருக்கும் த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு படு பிஸியான ஆர்டிஸ்ட் ஆக மாறிவிட்டார் .இவரின் கைவசம் பல படங்கள் இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது.
விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியல்வாதியாக களம் இறக்கும் நிலையில் திரிஷாவும் தற்போது நடிப்புக்கு முழுக்கு போட தயாராகி விட்டார். இந்த தகவல் உண்மையா பொய்யா… என்று தெரியாதா பட்சத்தில் பதட்டத்தில் ரசிகர்கள் இணையத்தில் த்ரிஷாவுக்கு comments போட்டு கதறிவருகின்றனர் .. ஆனால் த்ரிஷாவின் இந்த முடிவிற்கு அவரது அம்மா சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவருக்கும் கடும் சண்டை வந்ததாக வளைபேச்சாளர் அந்தணன் கூறியுள்ளார்.
த்ரிஷாவின் இந்த முடிவிற்கு காரணம் விஜய்..யின் tvk கட்சியில் திரிஷா…இணையபோவதாக அண்மையில் பயில்வான் கூறினார். இதை நிருபிக்கும் வகையில் விஜய் த்ரிஷா இருவரும் ஒன்றாக சுற்றும் பல வீடியோக்கள் வந்த வண்ணம் இருக்கிறது , ரசிகர்கள் சிலர் திரிஷா, அரசியலில் இறங்கினாலும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்