in

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலாயாகம்

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரியதச்சூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் உள்ள ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பலா யாக குண்டத்தில் மிளகாய், பழங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் சக்தியை வழிபடுவதே புண்ணியம். அதிலும் உக்கிர தேவதையாகத் திகழும் பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பிரித்தியங்கரா தேவிக்கு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

What do you think?

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் எறையூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம்

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணுடைய நாயகியம்மன் திருக்கோவிலில் பாரம்பரியமான செவ்வாய் பொங்கல் திருவிழா