in ,

விருதுநகரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

விருதுநகரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை சமூக நீதிக்கொள்கைக்கு எதிராகவும் பெண்கள் நலனுக்கு எதிராகவும் ரூ.3000/-ம் தொகுப்பூதியத்தில், நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும், தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி, உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமுல்படுத்த வேண்டும், அரசு அனைத்துத்துறை காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்ககிடவும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்தணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் முழக்கமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

காரியாபட்டி பேரூராட்சிக்கு குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள கழிவுநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

மினரல் வாட்டர் டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேர் கைது