in

நாகை மாவட்டத்தில் நெல்லின் தரம் மற்றும் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் நெல்லின் தரம் மற்றும் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு; 22 சதவீதம் ஈரப்பதம் தளர்த்தி நெல் கொளமுதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

பேட்டி: தனபால் விவசாயி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களுக்கு முன்பு பருவம் தவறிய கனமழை கொட்டி தீர்த்தது இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் போனது மேலும் தண்ணீர் வழியாத காரணத்தினால் நெல்மணிகள் வயலிலே சாய்ந்து கிடந்ததால் ஈரப்பதம் கூடிய நிலையில் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வயலில் தண்ணீர் தேங்கி நின்று நெல்மணிகள் நனைந்து உள்ளதால் 22 சதவீதம் ஈரப்பதம் தளர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நவின், ராகுல் தலைமையில் மத்திய குழுவினர் இன்று நாகை மாவட்டத்தில் உள்ள எரவாஞ்சேரி, சீயத்த மங்கை, பட்டமங்கலம், தேவூர், மணக்குடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் கொண்டு வந்த நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து பரிசோதனை செய்தனர் . அவர்கள் சோதித்த ஆய்வில் 23 சதவீதத்திற்கு மேல் நெல்லின் ஈரப்பதம் இருந்தது.

அப்போது அங்கிருந்து விவசாயிகள் பருவம் தவறிய பெய்த கனமழையினால் நெல் ஈரப்பதம் கூடியுள்ள நிலையில் மகசூல் பாதிப்பு அடைந்துள்ளதாலும் அறுவடை செய்ய முடியாமல் நெல்மணிகள் வீணாகப் போனதால் நஷ்டத்தை சரிகட்ட 22 சதவீதம் ஈரப்பதம் தளர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்

What do you think?

வீடுகளை அகற்றுவதாக பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் திரிசதி அர்ச்சனை