in

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் திரிசதி அர்ச்சனை

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் தை மாத செவ்வாய் தின திரிசதி அர்ச்சனை ஏராளாமான பக்தர்கள் பங்கேற்ப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் .

தை மாத செவ்வாய் கிழமை திரிசதி அர்ச்சனையை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிகக்காய்,பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கொண்டுஅபிஷேகமும் பின்னர் சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு மதியம் 1- மணிக்கு தரிசதி அர்ச்சனை நடைபெற்றது அப்போது முருகப்பெருமானுக்கு 301 நாமாவளி அர்ச்சனை செய்த பின்கோபுர தீபம் உட்பட பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மகாதீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளாமான பக்தர்கள் தரிசனம் பெற்று சென்றனர், வருகை புரிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

What do you think?

நாகை மாவட்டத்தில் நெல்லின் தரம் மற்றும் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு