in

நத்தம் அருகே 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன விழா- அஷ்ட இலட்சுமிகளின் தத்ரூப தரிசனம்

நத்தம் அருகே 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன விழா- அஷ்ட இலட்சுமிகளின் தத்ரூப தரிசனம்

 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மேட்டுக்கடையில் உள்ள சக்தி சரோவர் தபோவனத்தில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக பாரதத்தின் பிரசித்தி பெற்ற 12 ஜோதிர் லிங்கங்களின் கண்காட்சி மற்றும் அஷ்ட இலட்சுமிகளின் தத்ரூப தரிசனம் உள்ளிட்ட ஆன்மீக திருவிழா இன்று (23.01.2025 முதல் 26.01.2025 வரை) 4 நாட்கள் நடைபெறுகிறது.

   

அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தெய்வீக தரிசன நிகழ்ச்சியை அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் இரா.விசுவநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்திரபிரதேசம், தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 12 பகுதிகளில் இருக்கக்கூடிய ஜோதிர் லிங்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.  இதை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தரிசன நிகழ்ச்சியில் 9 சிறுமிகள் அஷ்ட லட்சுமி களின் அலங்காரத்தில் தத்ரூபமாக காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் நத்தம் கோபால்பட்டி சாணார்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார  கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் திரிசதி அர்ச்சனை

தொடர் விடுமுறை காரணமாக குவிந்த பக்தர்கள் கூட்டத்தில் உண்டியல் நிரம்பியது